ஞாயிறு, 6 டிசம்பர், 2009

கல்வி கட்டணம்

கல்விக்கடன் பற்றி இன்று விஜய் டிவியில் நீயா நானா என்ற நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றது.

கல்விக்கடன் தேவையே கல்வி கட்டணம் அதிகரிக்கப்பட்டதுதான்.
இன்று அரசாங்கம் தனியார் கல்வி நிறுவனங்களை வளர்த்துவிட்டு அவற்றின் முதலாளிகளின் வருமானத்திற்காக கல்விக்கட்டணங்களையும் அதிகரிக்கச்செய்துள்ளன.

இந்த கல்வி வியாபாரிகள் தங்களது வருமானம் குறைவிலாமலிருக்க, அரசை இவர்கள் பயன்படுத்தும் ஒரு முறை தான் கல்விக்கடன். இவர்களால் பொது மக்களின் பணத்தை கட்டுப்பாடுகள் அதிகமின்றி திரும்பி வருவதற்கான முழுமையான உத்திரவாதம் இன்றி கல்வி கடன் வழங்கப்பட வலியுறுத்தப்படுகிறது.

கல்விக் கடனை ஊக்கப்படுத்தும் அரசு மற்றும் மற்ற அமைப்புகள் கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்படாமலிருக்கவோ அல்லது கல்வி கட்டணங்களை குறைக்கவோ முயற்சி செய்ய தவறுவது ஏன்?

கல்வி கடன் வழங்கப்பட கூடாது அல்லது கல்விகடன் தேவையில்லை என்பதை விட தேவையானவர்களுக்கு மட்டும் கல்விகடன் வழங்கப்பட வேண்டும் என்பது தான் வாதம். ஒருவருடத்திற்கு தனது குழந்தையின் கல்விக்கான செலவை எதிர்கொள்ள வழியில்லாதவர்களுக்கு இது போன்ற கல்வி கடன் அவசியம் வழங்கப்பட வேண்டும்.

தனது குழந்தையை மாதம் சில, பல ஆயிரம் பணம் வசூலிக்கும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்க வைக்கும் வசதியுள்ளவர்கள், மெட்ரிக் பள்ளிகளின் கட்டணங்களுக்கு சிறிதளவே உயர்வான கல்லூரி கட்டணம் செலுத்த மட்டும் கடன் எதிர்பார்ப்பது எத்தகைய மனோபாவம் என்பது தெரியவில்லை.

எதையும் இலவசமாக பெற்றுவந்த இந்த மக்கள், இது நாள் வரை இலவசமாக பெற்றுக் கொண்டிருந்த கல்வி - இன்று கட்டணமயமானதை உணரமறந்து அல்லது மறுத்து - கல்வி முதலாளிகளின் கனவுகளை நிறைவேற்ற - கஜானாக்களை நிரப்ப - வங்கிகளை முற்றுகையிட்டு பொதுப்பணத்தில் இக்கல்வி முதலாளிகள் செழித்தோங்க வழிவகை செய்கின்றனர்.

இவற்றை மறந்து அரசும் சரி பெற்றோரும் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணங்களின் மீது ஒரு கட்டுப்பாடு கொண்டுவர முயற்சி செய்வது ஒரு நல்ல முயற்சியாக இருக்கும்.

புதன், 18 நவம்பர், 2009

ஏன் பேச முடியவில்லை

நேற்றும் இன்றும் அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள் நடந்தன. நீண்ட நாடகளுக்குப்பின் நண்பர் விவேகானந்தனை சந்தித்தேன். பேசிக் களித்த நாட்கள் உடன் பணியாற்றிய காலங்கள் நினைவிலாடின, ஆனாலும் அதிகம் பேசிக்கொள்ள இருவருக்கும் போதிய அவகாசம் கிடைக்கவில்லை. சந்த்தித்த போது பல விஷயங்கள் பேச நினைத்தும் முடியவில்லை.

இப்பொழுது இப்பக்கத்தில் எழுதும் போது விவேக்கின் தமிழ் ஆர்வம் (அவர் அப்பா புலவர் திரு ஜனார்த்தனம் அவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற வரம்) மனதில் சரமிடுகிறது. நாடகங்கள் எழுதவும் நடிக்கவும் ஹூம்.... இப்பொழுது எப்படி கதை, நாடகம், நடிப்பு ஏதேனும் உண்டா கேட்கவும் இயலவில்லை.

விவேக்கையும் இவ்வலை உலகத்தில் உலவச்சொல்லியுள்ளேன் விரைவில் அவரின் பத்திகளும் வலைக்குள் உலாவரும்.

ஞாயிறு, 15 நவம்பர், 2009

நானும் அவர்களானேன்

இங்கு இன்றும் நல்ல மழை, சென்ற வாரம் நான் குழந்தைகளுடன் குற்றாலம் சென்று வந்தது நினைவுக்கு வருகிறது.

குற்றாலம் மெயின் அருவிக்கு சென்று பார்த்து விட்டு திரும்பும் போது புலி அருவி செல்லலாம் என கோபி சொன்னான் புலி அருவி செல்லும் வழியில் திரும்பினோம் நல்ல மழை. அந்த திருப்பத்தில் இருந்த டீ கடையில் நாங்கள் மூவரும் சற்றே ஒதுங்கினோம்.

பேச்சினிடையே என் குழந்தைகளிடம் மலரும் நினைவுகளாக நான் மழையில் நனைந்து கொண்டு சைக்கிள் ஓட்டிய எனது அனுபவத்தை சொன்னேன்.

என் மகள், மகன் இருவருக்கும் உடனே ஆர்வம், மழையில் நனைந்து கொண்டே பயணம் செய்ய.

சிறிது யோசித்தேன் உடனே கோபி "அப்பா மழையில நனையிறதப்பத்தி ஒண்ணுமில்ல, ரொம்ப் போனா ஒரு ஊசி போட்டுக் கொள்ளலாம்" என்று சொன்னான்

அடுத்த நிமிடம் எங்கள் வண்டி தரையில் ஓடிக்கொண்டிருந்த நீரைக்கிழித்துக் கொண்டு ஓடத்தொட்ங்கியது குற்றாலத்திலிருந்து தென் காசி வீட்டு வசதி வாரியத்தை நோக்கி.

வண்டிமுன்னோக்கி நகர ஆரம்பித்த போதே மனம் பின்னோக்கி சென்றது. நண்பர்களுடன் அன்றைய நாட்களில் மழையில் நனைந்து கொண்டே சைக்கிளில் கடைய ந்ல்லூரிலிருந்து கிருஷணாபுரம் வரை (2 அ 3 கி.மீ தான்) சென்று வந்தது. யாருமே இல்லாத சாலையில் தனியிருவராய் நனைந்தபடி சத்தமாய் பேசிக் கொண்டு ம்ஹ்ம் இனி நினைத்து மட்டுமே பார்க்க முடியும்.....

வரும் வழியில் சாலையில் மனித நடமாட்டமே இல்லை குழந்தைகள் இரண்டும் குரல் வளத்தை சோதனையிட்டுக்கொண்டே வந்தன சந்தோஷத்தில்.

என் குழந்தைகள் இருவருக்கும் நல்ல அனுபவம், ரொம்ப சந்தோஷம்.


புதன், 25 மார்ச், 2009

பிரிவு

காலம் எத்தனையானாலும்
காதல் மனைவியின் பிரிவு
மனதில் கனத்தை தரத்தான் செய்கிறது... ...

ஏக்கம்

ஆண்டு பல காத்திருந்தேன்
அன்று இல்லாத ஏக்கம் ஏனின்று !

என் மனத் தேடல்

காலம் பல ஆனபின் நீண்ட பிரிவு.
தொலை தூரத்தில் நீ
ஆயினும்
என் முகமருகே உன் உதடுகள்
உச்சரிக்கும் வார்த்தைகள்
தொலை பேசியின் உதவியால்
மனதில் மகிழ்ச்சியான நினைவலைகளை
தருகிறது.

செவ்வாய், 24 மார்ச், 2009

Introuduction

Dear Friends

I am Bala Ravi Sankar, with minimum educational qualification i just entered into web world to know more and more