குற்றாலம் மெயின் அருவிக்கு சென்று பார்த்து விட்டு திரும்பும் போது புலி அருவி செல்லலாம் என கோபி சொன்னான் புலி அருவி செல்லும் வழியில் திரும்பினோம் நல்ல மழை. அந்த திருப்பத்தில் இருந்த டீ கடையில் நாங்கள் மூவரும் சற்றே ஒதுங்கினோம்.
பேச்சினிடையே என் குழந்தைகளிடம் மலரும் நினைவுகளாக நான் மழையில் நனைந்து கொண்டு சைக்கிள் ஓட்டிய எனது அனுபவத்தை சொன்னேன்.
என் மகள், மகன் இருவருக்கும் உடனே ஆர்வம், மழையில் நனைந்து கொண்டே பயணம் செய்ய.
சிறிது யோசித்தேன் உடனே கோபி "அப்பா மழையில நனையிறதப்பத்தி ஒண்ணுமில்ல, ரொம்ப் போனா ஒரு ஊசி போட்டுக் கொள்ளலாம்" என்று சொன்னான்
அடுத்த நிமிடம் எங்கள் வண்டி தரையில் ஓடிக்கொண்டிருந்த நீரைக்கிழித்துக் கொண்டு ஓடத்தொட்ங்கியது குற்றாலத்திலிருந்து தென் காசி வீட்டு வசதி வாரியத்தை நோக்கி.
வண்டிமுன்னோக்கி நகர ஆரம்பித்த போதே மனம் பின்னோக்கி சென்றது. நண்பர்களுடன் அன்றைய நாட்களில் மழையில் நனைந்து கொண்டே சைக்கிளில் கடைய ந்ல்லூரிலிருந்து கிருஷணாபுரம் வரை (2 அ 3 கி.மீ தான்) சென்று வந்தது. யாருமே இல்லாத சாலையில் தனியிருவராய் நனைந்தபடி சத்தமாய் பேசிக் கொண்டு ம்ஹ்ம் இனி நினைத்து மட்டுமே பார்க்க முடியும்.....
வரும் வழியில் சாலையில் மனித நடமாட்டமே இல்லை குழந்தைகள் இரண்டும் குரல் வளத்தை சோதனையிட்டுக்கொண்டே வந்தன சந்தோஷத்தில்.
என் குழந்தைகள் இருவருக்கும் நல்ல அனுபவம், ரொம்ப சந்தோஷம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக