வெள்ளி, 8 ஜூலை, 2016

கோபி போய் பால் வாங்கிட்டு வந்துடுறா
கோபி போய் காய்கறி வாங்கிட்டு வந்திடேன்
கோபி ஆச்சி வீட்டில கொஞ்சம் கறி வேப்பிலை வாங்கிட்டு வாடா
கோபி அந்த மோட்டர போடு அப்படியே மாடிக்கு போய் கீழ் தொட்டிக்கு லைனை மாத்திட்றா
கோபி தொவச்ச துணியெல்லாம் மாடிலயும் ஆச்சி வீட்லயும் காயப் போட்டுட்டு வாடா
கோபி மழை வர்ற மாதிரி இருக்கு வெளில் கிடக்கிற துணிகளைல்லாம் எடுத்து அதையும் மாடில போட்டுட்டு வாப்பா
கோபி அந்த தேங்காய ஒடச்சிக் குடேன்
கோபி அம்மா மொபைல எடுத்து பிறந்த நாள் வாழ்த்துப் போட்டுடா
டேய் அப்படியே Face Bookலயும் ஒரு Status போட்டுடா
(இதெல்லாம் அம்மா)

தம்பி எங்கூட மீனா வீடு வரையும் வர்றையாடா
ப்ளீஸ்
தம்பி அக்காவுக்கு ஒரு சாக்லேட் வாங்கிட்டு வாயேண்டா
தம்பி பஜாருக்கு போகணும் அக்காகூட வாயேன்
தம்பி அக்காவோட Dressலாம் தேய்ச்சு குடேன்
தம்பி கடைக்கு போய் அக்காவுக்கு Recharge பண்ணிட்டு வந்திறேன் (இதெல்லாம் அக்கா)

கோபி அந்த Car ஐ Park பண்ணிட்டு வா
கோபி அப்பாவுக்கு அந்த Lap Topஐ எடுத்து தா
டேய் அங்க என்னடா பண்ற அப்பாக்கு முதுகு வலி இருக்கு கொஞ்சம் பிடிச்சு விடுறா
ஏல இங்க வாடா இந்த பழைய பேப்பரெல்லாம் ஒழுங்கா அடுக்கி வை கடைல போடணும்
கோபி அப்பாக்கு பழம் வாங்கிட்டு வாயேன்
டேய் தம்பி அப்பாகூட வாயேன் கடைத் தெரு போய்ட்டு வரலாம்
கோபி அப்பாவோட துணி தைக்க போட்டேன்ல அத நாளைக்கு
தை ச்சாச்சுன்னா வாங்கிட்டு வந்து வச்சிறேன்
அம்மா செல்லந்தான் எனினும் அப்பாவுக்கும் நல்ல தோழன் அக்காவுக்கும் நல்ல நண்பன்

இதுநாள் வரை வீட்டின் ஒவ்வொரு அசைவிலும் இருந்தவன் கோவை செல்கிறான்

அவனின்றி ஓரணுவும் அசையாது என்ற நிலையை உருவாக்கியுள்ளான்


கடந்த இரண்டு வருடமா கோபி இல்லேன்னா வீட்டுல ஒரு துரும்பும் அசையாது. மேல்நிலை பள்ளி படிச்ச இரண்டு ஆண்டுகளுமே வீட்டின் முழுப் பொறுப்பும் எடுத்துக் கொண்டான். விருந்தினர் உறவினர் நண்பர்கள் யார் வந்தாலும் அவங்களுக்கும் வேண்டியதை உரிய முறையில் செய்திடுவான்.

பேருதான் கோபியே தவிர யார்ட்டயும் கோபிக்கவே மாட்டான்.

யாருக்கும் உதவும் குணமும் பொறுமையும் சிரிச்ச முகமும் அவனுக்கு சிறப்பு கோபி நாளை கோவையில் கல்லூரிக்கு சென்றபின் இந்த வீட்டின் முறைமை எவ்வளவு சிரமப்படும் எனத்தெரியவில்லை.

கோபி சென்ற இடத்திலும் சிறந்த மாணவனாகவும் நல்ல நண்பனாகவும் தோழனாகவும் தேவையானவர்களுக்கு உதவுபவனாகவும் இருப்பான் என்பது நிச்சயம்.