வெகு நாடகளுக்குப்பின் ஒரு சுற்றுலா பயணம், ஒப்பிலியப்பன் கோவிலில் நடைபெற்ற செந்திலின் திருமணத்தை முன்னிட்டு கும்பகோணம் சென்று அங்கு இரண்டு நாட்களுக்கு மேல் தங்கி பல இடங்களை சுற்றி பார்த்தோம். இதில் சில இடங்கள் ஒவ்வொரு முறையும் கும்பகோணம் செல்லும் போதெல்லாம் தவறாமல் செல்லும் திருநாகேஸ்வரமும், திருவிடைமருதூரும் இம்முறையும் சென்றோம். எனக்கென்னவோ தஞ்சை பெரிய கோவிலைவிட இவ்விரு கோவில் களும் பெரும் மலைப்பைத்தரும்.